ஆயுதம் இல்லாத கறுப்பு இன இளைஞரை சுட்டு கொன்ற சிகாகோ போலீஸ் அதிகாரி பணி நீக்கம்

சிகாகோ:

சிகாகோவில் கறுப்பின தம்பதி பயண்ம செய்த காரை நோக்கி போலீஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 19 வயது சிறுவன் கொல்லப்பட்டார். மேலும் இந்த சம்பவத்தில் அந்த சிறுவனின் பெண் தோழி காயமடைந்தார்.

சிகாகோ அதிகாரி, மார்செலிஸ் ஸ்டின்னெட்டை என்ற கறுப்பின இளைஞரை சுட்டு கொலை செய்த சம்பவத்திற்கு விளக்கம் அளித்த சிகாகோ காவல் துறையினர் இது போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் நடவடிக்கை என்று தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பேசிய வாகேகன் காவல்துறை தலைவர் வெய்ன் வால்ஸ், போலீஸ் நடைமுறையை மீறியதற்காக, அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட காரில் எந்த ஆயுதமும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த துப்பாக்கி சுட்டை நடத்திய அதிகாரியின் பெயரை அவர் வெளியிடப்படவில்லை.