டில்லி:

இந்தியாவில் 2017 ம் ஆண்டில் ஆன்லைன் மூலம் அதிக அளவு சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டிரு க்கும் தகவல் வெளியாகியுள்ளது.

இணையம் மூலம் உணவு பொருட்கள் விற்பனை இந்தியாவில் அதிகரித்துள்ளது. உணவு விற்பனை இணையமான சுவிக்கி என்ற இணையதளம் எடுத்த ஆய்வில் இந்த ஆண்டு (2017) இணையத்தின் மூலம் சிக்கன் பிரியாணியை தான் இந்தியர்கள் அதிக அளவில் ஆர்டர் செய்துள்ளனர் என தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு மும்பை, டில்லி, ஐதராபாத், பெங்களூர், புனே, சென்னை, கொல்கத்தா போன்ற நகரங்களில் நடத்தப்பட்டது.

2017ம் ஆண்டில் 5 முக்கிய பொருட்களில் மசாலா தோசை, பட்டர் நான், தந்தூரி ரொட்டி, பன்னீர் பட்டர் மசாலா இருந்தன. இதில் பீட்சா இல்லை. ஆனால் பீடசாவை இணையத்தில் 5 லடசம் பேர் தேடியுள்ளனர். அடுத்ததாக பர்க்கர், சிக்கன், கேக், மோமோஸ் தேடப்பட்டுள்ளது. டிசம்பர் 3ம் தேதி அதிக அளவு ஆன் லைனில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் ஒருவர் அதிகபட்சமாக ஆயிரத்து 415 முறை ஆர்டர் செய்துள்ளார். மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு பெரும்பாலும் இந்தியர்கள் மசாலா தோசை, இட்லி, வடை உணவுகளை ஆர்டர் செய்துள்ளனர். மேலும், பாவ் பாஜி, பிரஞ்சு பிங்கர்ஸ், சமோசா , சிக்கன் ரோல், சிக்கன் பர்கர் மற்றும் பேல் பூரி ஆகியவற்றை சிற்றுன்டியாக ஆர்டர் செய்துள்ளனர்.