கொலையில் முடிந்த கோழிக்கறி துண்டுகள்..

கொலையில் முடிந்த கோழிக்கறி துண்டுகள்..

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை ஓட்டல் ஒன்றில் சமையல்காரராக வேலை பார்த்து வந்தார், பப்லு சைனி.

ஊரடங்கு காரணமாக அந்த ஓட்டல் மூடப்பட்டுள்ளது.

ஓட்டல் முதலாளிக்கு ருசியாக சிக்கன் சாப்பிட வேண்டும் என்று ஆசை.

இறைச்சிக்கடைக்குச் சென்று கோழி வாங்கி வந்து, சிக்கனை துண்டு துண்டாக நறுக்கிப் பொறிக்குமாறு சமையல்காரரிடம் கூறியுள்ளார்.

சமையலும் தயார்.

சிக்கன் துண்டுகளை எண்ணிப்பார்த்த போது, ஒன்றிரண்டு துண்டுகள் குறைந்து இருந்தது.

‘’ எனது சிக்கனை நீ ஏன் தின்றாய்?’’ என்று கேட்டு அவனது முதலாளியும் சகாக்களும் சமையல்காரரை அடித்து உதைத்துள்ளனர்.

படுகாயம் அடைந்த சமையல்காரர் பப்லு, சிகிச்சை பலன் இன்றி தனியார் மருத்துவமனையில்  நேற்று இறந்து போனார்.

சிக்கன் துண்டுக்காக கொலையில் ஈடுபட்டுத் தப்பி ஓடிய ஓட்டல் முதலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.

– ஏழுமலை வெங்கடேசன்