நீதிமன்றத்தில் சிதம்பரம்; காவலில் எடுக்க சிபிஐ தீவிரம்! பரபரக்கும் தலைநகரம்

டில்லி:

என்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று பிற்பகல் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டார். தற்போது அங்கு பரபரப்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

ப.சிதம்பரத்தை கைது செய்தது பற்றி டெல்லி நீதிமன்றத்தில் சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், விசாரணைக்கு சிதம்பரம் ஒத்துழைக்க மறுப்பதாகவும், அதனால், 5 நாள் போலீஸ் காவல் வழங்கும்படி சிபிஐ நீதி மன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது. அங்கு பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருந்ததை தொடர்ந்து,  டெல்லி சிபிஐ நீதிமன்றத்திற்கு நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மற்றும் வழக்கறிஞர் கபில் சிபல் உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வருகை தந்திருந்தனர்.

சிபிஐ நீதிமன்றத்தின் நீதிமன்ற அறையில் மூத்த வழக்கறிஞர் தயான் கிருஷ்ணன் மற்றும் வழக்கறிஞர் அர்ஷ்தீப் சிங் குரானா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து  டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இருந்து ரோஸ் அவென்யூ நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் காரில்  அழைத்துச் செல்லப் பட்டார். அதே நேரத்தில் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் பத்மினி சிங் நீதிமன்றம் வருகை தந்தார்.

அதையடுத்து, சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் முன் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற கூண்டில் ஏற்றப்பட்டார். தொடர்ந்து விசாரணை ஆரம்பமானது.

அப்போது, ப.சிதம்பரத்தை கைது செய்தது பற்றி டெல்லி நீதிமன்றத்தில் சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்தது. மேலும்,  விசாரணையின்போது,விசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்க மறுப்பதாக தெரிவித்த சிபிஐ வழக்கறிஞர்,  சொன்ன பதிலையே திரும்ப திரும்ப சொல்வதால், காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது.

மேலும், சிதம்பரத்திடம்  3 மணி நேரத்திற்கு மேல் நடத்தப்பட்ட விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை  என்றும், 5 நாள் காவலில் வைத்து விசாரிக்கக அனுமதி அளிக்கும் படியும் நீதிபதியிடம் சிபிஐ கோரிக்கை வைத்துள்ளது.

சி.பி.ஐ.க்கு நீதிமன்றத்தில் வாதிடும் சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா, பி.சிதம்பரத்தின் 5 நாள் காவலைக் கோரி ஒரு விண்ணப்பத்தை தாக்ககல் செய்தார். மேலும், ப.சிதம்பரத்துக்கு,  ஜாமீனில் வெளி வர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இருந்ததாகவும்,   காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது  என்றும்  ஆவணங்களின் அடிப்படையில் சிதம்பரத்திடமும், மற்றவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டி இருப்பதாகவும் வாதிட்டார்.

மேலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் சிடி எனப்படும் வழக்கு விபரங்களை பதிவு செய்கிறோம் என்றும் தெரிவித்தார்.

தைத்தொடர்ந்து ப.சிதம்பரம் தரப்பில் பிரபல வழக்கறிஞர் கபில்சிபல் தனது வாதத்தை தொடர்ந்தார்.  அப்போது, இதே  வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கார்த்தி சிதம்பரத்திற்கு ஏற்கனவே  ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது உள்ளதை சுட்டிக்காட்டியவர்,  இந்த வழக்கில் பீட்டர்,  இந்திராணி முகர்ஜி ஆகியோரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டியவர், சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி விசாரணை முடிவடைந்துவிட்டது. இதனால் ஜாமீன் வழங்குவதில் ஆட்சேபம் என்ன இருக்கிறது எனவும் கபில் சிபல் கேள்வி விடுத்தார்.

சிதம்பரம் பாதுகாப்பு வளையத்தில் இருப்பதாக கூறினார்கள் ; முன் ஜாமின் மனு மீது 7 மாதங் களுக்கு பிறகு தீர்ப்பு கொடுக்கப்பட்டது ; இதுதான் பாதுகாப்பு வளையமா? 2017-ல் வழக்கு பதிவு செய்த போது சிதம்பரத்திடம் விசாரித்திருக்கலாம் 2018-ல் விசாரணைக்கு அழைத்த போது கூட விசாரித்திருக்கலாம் ஆனால் எதையுமே செய்யவில்லை என்று சிபிஐ மீது கபில்சில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்.

தொடர்ந்து,  சிதம்பரத்திடம் சிபிஐ கேட்ட  கேள்விகளை கபில்சிபல் நீதிபதியிடம் கொடுத்தார். தொடர்ந்து நீதிபதியை பார்த்து பேசியவர், 12 கேள்விகளும் உங்கள் முன் உள்ளது, இவை அனைத்துக்கும் சிதம்ப்ரம் பதில் கூறியுள்ளார். அப்பபடி இருக்கும்போது, எப்படி ஒத்துழைப்பு தரவில்லை என கூறலாம் என்று வாதிட்டவர், நேற்று சி.பி.ஐ சிதம்பரத்திடம் கேட்ட கேள்வி களுக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுப்பு தெரிவித்தார்.

நேற்று இரவு விசாரிக்க வேண்டுமென சி.பி.ஐ சொன்னது , ஆனால் 12 கேள்விகள் மட்டுமே கேட்டுள்ளார்கள், இப்போதும் கூட விசாரிக்க வேண்டுமென சொல்கிறார்கள் ஆனால் அவர்களிடம் கேள்விகளே இல்லை  என்று கூறிய கபில்சிபல், இதெல்லாம் நடந்துள்ளது என சி.பி.ஐ கூறுவதெல்லாம் சத்திய புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது அல்ல, 2018 ஜூன் மாதம் நடந்த விசாரணை புத்தகத்தை சமர்ப்பியுங்கள், ஒத்துழைப்பு தந்தாரா இல்லையா என பார்க்கலாம்  என்றவர்,

இந்த வழக்கு தொடர்பாக ஒரே ஒரு நாள் மட்டுமே சிதம்பரத்திடம் விசாரணை செய்தார்கள் விசாரிக்கும் தேவை இருந்தால் மீண்டும் அழைத்திருக்கலாம் சி.பி.ஐ. அழைப்பை சிதம்பரம் ஒருபோதும் நிராகரித்ததில்லை என்றும், இந்த வழக்கில் 10 ஆண்டுகள் கழித்தே இந்த வழக்கில் FIR போடப்பட்டது .

இது தொடர்பாக, சிதம்பரத்தை மட்டுமே சிபிஐ குறிவைக்கிறது, ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு அனுமதி கொடுத்தது தனிப்பட்ட முடிவல்ல சாதாரண நடைமுறைக்கு ஒப்புதல் வழங்கியவர் தான் நிதி யமைச்சராக இருந்த சிதம்பரம், அதனால் ஒப்புதலுக்கு அவர் பொறுப்பேற்க இயலாது ஒப்புதல் வழங்கிய 6 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது கைது நடவடிக்கை இல்லை என்று கூறியவர், சம்பந்தப்பட்ட அமைச்சரவை செயலாளர்கள் அனுமதி வழங்குவதற்கான பரிந்துரையை வழங்கிய பின்னரே நிதியமைச்சர் ஒப்புதல் வழங்கினார்  என்றும், முதலீடுகளை அனுமதித்த உத்தரவை FIPB அமைப்பில் இருந்த 6 செயலாளர்கள் வழங்கினார்கள்.  ஆனால் அவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லையே ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.  சிபிஐ கூறுவது எல்லாம் வேத வாக்கு அல்ல என்றும், சிபிஐ கேட்ட கேள்விகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வாதாடினார்.

ஏற்கனவே இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் ஜாமினில் உள்ளார் , மற்றொருவரான பட்டய கணக்காளர் பாஸ்கரன் முன் ஜாமின் பெற்றுள்ளார், இந்திராணி  ஜாமின்  பெற்றுள்ளார் அப்படி இருக்கும்போது சிதம்பரத்துக்கு ஜாமின் மறுக்கப்படுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், தலைநகரில் கடும் போக்குவரத்து நெரில் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் காங்கிரசார் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக தலைநகர் டில்லி பரபரப்பாக காணப்படுகிறது.