கபில்சிபலுக்கு எதிராக சிதம்பரம் ஆஜர்! இதுதான் வாவ் மொமென்ட்…..!

நெட்டிசன்:

மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு

இதுதான் வாவ் மொமென்ட்..

சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த பா. சிதம்பரம் முதன் முறையாக உச்சநீதிமன்றத்தில் ஒரு குடும்ப வன்முறை தொடர்பான வழக்கில் வாதாடுகிறார்..

அந்த வழக்கில் எதிர்தரப்பில் வாதாடும் வழக்கறிஞர்கள் யார் யார் தெரியுமா கபில்சிபல் மற்றும் ஏ எம் சிங்வி.

ஐஎன்எஸ் முறைகேடு வழக்கில் இந்த இருவரும்தான் வெற்றிகரமாய் வாதாடி சிதம்பரத்தை ஜாமினில் வெளியே கொண்டு வந்தார்கள்..