என் மீது வழக்குப் பதிவு செய்ய சிபிஐ.க்கு அழுத்தம்….ப.சிதம்பரம்

--

டில்லி:

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மீது சி.பி.ஐ புதிய குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்துள்ளது.

இது குறித்து சிதம்பரம் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,‘‘சிபிஐ-க்கு அளிக்கப்படும் அதிகப்படியான அழுத்தம் காரணமாகவே என் மீதும், அரசு அதிகாரிகள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

2006-ம் ஆண்டு மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ. 3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீட்டுக்கு முறையான அனுமதி பெறவில்லை எனவும், இதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தை அமலாக்கத் துறையும், சிபிஐயும் தீவிரமாக விசாரித்து வருகின்றன. டில்லியில் உள்ள பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது.