தமிழ் முழக்கம் எழுப்பிய சிவனடியார் ஆறுமுகச்சாமி மறைவு

--

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேவாரம் பாடி தமிழ் முழக்கம் எழுப்பிய  சிவனடியார் ஆறுமுகசாமி இறைவனடி சேர்ந்தார்.

சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் தேவாரம் பாடக் கூடாது என்று அங்கே ஆதிக்கம் செலுத்திவரும் தீட்சிதர்கள் தமிழுக்கு தடை போட்டனர்.   அதனை எதிர்த்து போராடி வெற்றி கண்டவர் சிவனடியார் ஆறுமுகசாமி.

தீட்சிதர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி அங்கே தேவாரம் பாடி தமிழை ஒலிக்கச் செய்தார்.

இவரது தமிழ்ப் போராட்டத்துக்கு  2008-ம் ஆண்டு வெளியான உயர்நீதிமன்ற தீர்ப்பும் பலம் சேர்த்தது.

அதே போன்று தீட்சிதர்களின் ஆதிக்கத்தில் இருக்கும் நடராஜர் கோயிலை தமிழக அரசின் அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் தொடர்ந்து போராட்டம் நடத்தியவர் ஆறுமுகசாமி.

கிராமத்தில் 94 வயதான சிவனடியார் ஆறுமுகசாமி  சிதம்பரம் அருகே குமுடிமலை இன்று உடல்நல குறைவால்  இறைவனடி சேர்ந்தார்.