சிதம்பரம் ஸ்டேடியம் ஹவுஸ்புல்: அட்டாக் செய்து ஆச்சரியப்பட வைத்த சென்னை ரசிகர்கள்

th28_fans_1409421fடெஸ்ட் கிரிக்கெட் அதிக நாள் நடப்பதால், போட்டியை விறுவிறுப்பாக நடத்தவும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்கும் ஓவர்களை குறைத்து போட்டிகளை நடத்த முடிவு செய்தனர். டெஸ்ட் போட்டியில் இருந்து ஒரு நாள் போட்டி பிறந்தது. ஒருநாள் போட்டியில் இருந்து T20 பிறந்தது. தற்பொழுது ஒரே ஒரு ஓவர் கொண்ட சூப்பர் ஓவர் போட்டிகள் கூட நடக்கின்றன. இப்படி நாளுக்கு நாள் கிரிக்கெட் விளையாட்டு பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறது.

இதனால், டெஸ்ட் போட்டிகள் மீது ரசிகர்களுக்கு இருக்கும் ஆர்வம் நாளுக்கு நாள் மெலிந்து வருகிறது. ஆனால், சென்னை ரசிகர்கள் அந்த நிலையை மாற்றி உள்ளனர். டிசம்பர் 16-ஆம் தேதி நடக்க உள்ள இந்தியா – இங்கிலாந்து இடையேயான 5-வது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட், இன்று சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் விற்கப்பட்டது. இதை ஆன்லைன் மூலம் பெறவும் ஏற்பாடு செய்திருந்தனர். முன்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.

இப்படி டெஸ்ட் கிரிக்கெட்டை காண ஆர்வம் காட்டும் சென்னையில் கடந்த பத்து வருடமாக வெறும் மூன்று போட்டிகளை மட்டுமே நடத்தி உள்ளனர். இனியாவது ரசிகர்கள் வரவில்லை என காரணம் சொல்லுவதை விட போட்டிகளை காண ஆர்வமாக உள்ள ஊர்களில் டெஸ்ட் கிரிக்கெட்டுகளை நடத்த வேண்டும்.