ராகுலை விமர்சனம் செய்த ஜெட்லி : ப சிதம்பரம் பதிலடி

டில்லி

ராகுலை குறித்து மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் விமர்சனத்துக்கு காங்கிரஸ் தலைவர் ப சிதம்பரம் பதில் அளித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தனது வலைதள பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனை செய்திருந்தர்.    அவர் வெள்ளிக்கிழமை அன்று, “தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடும் இடதுசாரி மனித உரிமை அமைப்புகள் எப்போதுமே தங்களின் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் உரிமைகள் பற்றி ஒன்றுமே பேசுவதில்லை.    இவர்களுக்கு எதிராக பேச வேண்டிய காங்கிரஸ் கட்சி அமைதியாக உள்ளது.   ஏனென்றால் இந்த அமைப்புகள் ராகுல் காந்தியின் அனுதாபத்தை பெற்ற அமைப்புகள்” என பதிந்திருந்தார்.

இதற்கு காங்கிரஸின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் பதில் அளித்துள்ளார்.   அவர் தனது பதிலில், “கடந்த 2013ஆம் ஆண்டு சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் போது காங்கிரஸ் கட்சியின் முக்கியத்தலைவர்கள் நந்தகுமார் படேல், வித்யாசரண சுக்லா உள்ளிட்டவர்களை மாவோயிஸ்டுகள் கொன்றனர்.   காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர காங்கிரஸ் முயற்சி செய்ததை யாரும் மறுக்க முடியாது.

ஆனால் அருண் ஜெட்லி மாவோயிஸ்டுகளும், பயங்கரவாதிகளும் ராகுல் காந்தியின் அனுதாபத்தை பெற்றவர்கள் என குற்றம் சாட்டுகிறார்.   அருண் ஜெட்லியி குற்றச்சாட்டு மிகவும் அபத்தமாகவும் நகைச்சுவையாகவும் உள்ளது.   காங்கிரஸ் கட்சி அந்த இரு அமைப்புகளுக்கும் என்றுமே எதிரானது ஆகும்” என குறிப்பிட்டுள்ளார்.