சென்னை: வாக்காளர் அடையாள அட்டை பிரச்னைக்கு தீர்வு, ஒரே படிவத்தை கொண்டு வருவது குறித்து கருத்து கூறுமாறு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா உத்தரவிட்டுள்ளார்.

வாக்காளர்களின் பெயர்கள், புகைப்படங்கள் பல இடங்களில் இருப்பது, முகவரி மாறியிருப்பது பல பிரச்சனைகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. அவற்றை போக்க, தனித்தனியே விண்ணப்பங்கள் உள்ளன. அந்த விண்ணப்பங்களை தான் வாக்காளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந் நிலையில் சென்னை வந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, சென்னை வந்தார். அவர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, சந்தீப் சக்சேனா உள்ளிட்டோருடன் ஆய்வு நடத்தினர்.

அதற்காக ஆய்வுக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராமநாதபுரம், வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதன் பிறகு, தேர்தல் ஆணைய அதிகாரிகள் தரப்பில் இருந்து செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள், அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், குறித்து ஆலோசிக்கப்பட்டது.

வாக்காளர் பட்டியல், தேர்தல் நடத்தை விதிகள், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் தமிழகத்தின் பங்களிப்பு அற்புதமாக இருக்கிறது. மேலும், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் அனைத்துக்கும் ஒரே படிவம் கொண்டு வரலாமா? அது தொடர்பான ஆலோசனைகளை வழங்குமாறு தமிழக மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.