சென்னை

வம்பர் மாதம் 3 ஆம் தேதி அன்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

வரும் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் தேதி தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இந்த அறிவிப்பை ஏற்கனவே தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதையொட்டி முதலில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இதற்கு முன்பு அனைத்துக் கட்சி கூட்டத்தைத் தேர்தல் ஆணையம் நடத்துவது வழக்கமாகும்

அவ்வகையில் வரும் நவம்பர் 3 ஆம் தேதி அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

அன்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.