காவிரி உரிமை பெற போராடும் அனைவருக்கும் முதல்வர் பாராட்டு

சென்னை:

காவிரி உரிமை போராட்டம் நடத்தும் அனைவருக்கும் முதல்வர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை அம்பத்தூரில் மே தினப் பொதுக்கூட்டம் நடந்தது இதில் முதல்வர் பழனிசாமி கலந்துகொண்டு பேசுகையில், ‘‘ சிறு தொழிலை ஊக்குவிக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

தொழிலாளர்களின் நலன் காக்கும் அரசாக அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. நமது உரிமையை பெறுவதற்கான ஒரு போராட்டம் தமிழகம் எங்கும் நடைபெற்று வருகிறது. காவிரி உரிமையை பெற போராட்டம் நடத்தும் அனைவரையும் பாராட்டுகிறேன்.

சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வவகையில் போராட்டம் நடைபெற வேண்டும். யாருடைய ஆட்சியில் காவிரி கிடைக்காமல் போனது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். காவிரி விவகாரத்தில் தவறு செய்தது கருணாநிதி தான். பித்தலாட்டம் செய்து இனி ஆட்சிக்கு வர முடியாது. நிலையான ஆட்சி செய்யும் அதிமுக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும்’’ என்றார்.