10 மாவட்ட எம்எல்ஏக்களுடன் முதல்வர் ஆலோசனை!

சென்னை:

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் வியாழன் வரை அனைத்து மாவட்ட M.L.A-க்களை சந்தித்து ஆலோசனை நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.

முதல் நாளான இன்று 10 மாவட்டங்களை சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இன்னும் சிறிது நேரத்தில் இந்த ஆலோசனை கூட்டம் தொடங்கியதாக கோட்டை வட்டார தகவல்கள் கூறுகிறது.

இதைத்தொடர்ந்து எம்எல்ஏக்கள் கோட்டையில் 10 மாவட்டத்தை சேர்ந்த எம்எல்ஏக்கள் கூடியுள்ளனர். அவர்களுடன் மாவட்ட செயலாளர்களும் முதல்வரை சந்திக்கிறார்கள்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தினகரனை சந்தித்துள்ள 8 எம்எல்ஏக்கள் பங்கேற்பார்களா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தொகுதி பிரச்சினை குறித்து விவாதிக்கப்படும் என கூறப்பட்டாலும், தற்போது அதிமுக அரசில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்தே விவாதிக்கப்படும் என தெரிகிறது.

You may have missed