கிராமத்தில் சாலையோர கடையில் தேநீர் குடித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி

 

 

சேலம்:

தனது சொந்தத் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாலையோர கடையில் முதல்வர் பழனிசாமி தேநீர் குடித்தார்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது சொந்த தொகுதியான எடப்பாடி பகுதியில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

முதலில் அவர் சமுத்திரம் பகுதியில் ரூ. 60 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை  துவங்கி வைத்தார்.

பிறகு  பக்கநாடு புறப்பட்டு சென்றார். அப்போது வழியில்  சாலையோரம் உள்ள அம்பாள் டீக்கடையை பார்த்ததும் காரை நிறுத்துமாறு ஓட்டுநரிடம்  கூறினார்.

பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி   அமைச்சர் விஜயபாஸ்கருடன் அமர்ந்து தேநீர் குடித்தார். அவருடன் கட்சி நிர்வாகிகளும் தேநீர் அருந்தினர்.

பின்னர் எடப்பாடி பழனி சாமி தேநீர் சாப்பிட்டதற்கான தொகையை கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு  புறப்பட்டு சென்றார்.

முதல்வர் மிக எளிமையான முறையில் சாலையோர  தேநீர் கடையில் அமர்ந்து  தேநீர் சாப்பிட்டதை  கண்ட பொதுமக்கள் ஆச்சரியப்பட்டனர்.