கொரோனா தடுப்பு நடவடிக்கை: சிறப்பு மருத்துவக்குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து, 19 பேர் அடங்கிய சிறப்பு மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.  தமிழகத்தில் இது வரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1596 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.  சென்னையில் மொத்தம் 358 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 19 பேர் அடங்கிய சிறப்பு மருத்துவகுழுவினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். காலை 10 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். ஆலோசனைக்கு பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.