அமித்ஷா விரைவில் நலம்பெற வேண்டும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் பதிவு

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமித்ஷா விரைவில் நலம்பெற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இன்று கொரோனா வைரஸ்  பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறியை அடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியானது.

இந்த தகவலை தமது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். தமது டுவிட்டர் பக்கத்தில், உடல்நிலை சீராக உள்ளது. ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறேன்.

கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொண்டு, கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்த இருந்தார்.

இந் நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் நலம்பெற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமது டுவிட்டரில் கூறி இருப்பதாவது: கொரோனா தொற்றில் இருந்து திரு. அமித்ஷா விரைவில் குணமடைய சர்வ வல்லமையுள்ள கடவுளை பிராத்திக்கிறேன். அவரது நல்ல ஆரோக்கியத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.