உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர் திருமூர்த்தி குடும்பத்தில் ஒருவருக்கு அரசுபணி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர் திருமூர்த்தி குடும்பத்தில் ஒருவருக்கு அரசுபணி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 24-ம் தேதி திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருமூர்த்தி என்ற பாதுகாப்புப் படை வீரர் பணியில் இருந்தார். அப்போது துப்பாக்கி வெடித்த்தில் குண்டு தவறுதலாக அவர் முகத்தில் குண்டு பாய்ந்தது.

இதையடுத்து, சம்பா மாவட்ட ராணுவ மருத்துவமனையில் திருமூர்த்தி அனுமதிக்கப்பட்டார். அவரது முகத்தில் இருந்த துப்பாக்கி குண்டு நீக்கப்பட்டது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலனின்றி திருமூர்த்தி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர் திருமூர்த்தி குடும்பத்தில் ஆழ்ந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி