காவிரி மேலாண்மை வாரியம்: இன்று மாலை முதல்வர் எடப்பாடி ஆலோசனை

சென்னை:

ச்சநீதி மன்ற உத்தரவுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விதிக்கப்பட்டிருந்த கெடு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், இன்று மாலை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

காவிரி நதி நீர் தொடர்பான மேல்முறையீடு வழக்கில், 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அந்த 6 வார காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது.

ஆனால், மத்திய அரசு இதுவரை எந்தவித முடிவும் அறிவிக்காத நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.