கட்டிடங்களுக்கான பரப்பளவு குறியீடு 2 ஆக உயர்வு: இன்றுமுதல் அமலுக்கு வந்தது

சென்னை:

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அதிரடி அறிவிப்புகளை  வெளியிட்டார்.

அப்போது,  சென்னை போன்ற நகரங்களில் வீடு கட்ட அனுமதிக்கப்படும் தள பரப்பளவு குறியீடு 1.5ல் இருந்து 2.0 ஆக அதிகரிக்கப்படும் என்றும், இந்த புதிய நடைமுறை உடடினடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்தார்.

விழாவில் எம்ஜிஆர் குறித்து புகழ்பாடிய எடப்பாடி,  எம்.ஜி.ஆர். புகழை பறைசாற்றும் வகையில் அரசு சார்பில் நாணயம், அஞ்சல் தலை வெளியிடப்பட்டதாகவும்,  தமிழக மக்களுக்காக கிருஷ்ணா குடிநீர் திட்டத்தினை செயல்படுத்தியவர். தனது சொத்துகளை பொது நலத்திற்கு விட்டு சென்றவர் என்று புகழாரம் சூட்டினார்.

எம்.ஜி.ஆர். என்ற சக்தி தோன்றியிருக்கா விட்டால் தமிழகத்தின் கதி நிர்க்கதியாகி இருக்கும். எம்.ஜி.ஆர். கட்சி அவரது படம் போன்று 100 நாட்களே இருக்கும் என்றவர்கள் கோட்டைக்கே வர முடியவில்லை என்றும்,  எதிர்ப்புகளை எல்லாம் மீறி சென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. விழாவை நிறுத்த தீட்டப்பட்ட சதி முறியடிக்கப்பட்டது என்றும் பேசினார்.

அதைத்தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர், கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பெயர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் என மாற்றப்படும் என்றார்.

சென்னை போன்ற நகரங்களில் உள்ள அனைத்து வகையான கட்டடங்களுக்கும் 1.5 முதல் 2 வரையான தரை மார்க்கெட் குறியீட்டு (FSI) அதிகரிக்கப்படும் என்று கூறினார்.

இந்த திட்டத்தின் வியாலாக செலவுகளை குறையும் என்றும், அதன் காரணமாக வீடுகளின் விலை குறையும் என நம்பப்படுகிறது.

FSI என்றால் என்ன?

சென்னையில் வீடு அல்லது அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்கு, எப்.எஸ்ஐ ( FSI) எனப்படும்  தள பரப்பளவு குறியீடு எனப்படும் கட்டட ஒழுங்கு முறை விதி பின்பற்றப்படுகிறது.

சென்னையில், சிறப்பு கட்டிடங்கள் எனும் 4 மாடிகளுக்கு மிகாத கட்டிடங்களுக்கு, FSI 1.5 மடங் காக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது 2.0 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

அதாவது மனை பரப்பை விட, ஒன்றரை மடங்கு பரப்பளவுக்கு கட்டிடங்களை அதில் கட்டிக் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு 1000 சதுர அடி நிலத்தில் 1500 சதுர அடி பரப்புக்கு மிகாமல் கட்டடத்தைக் கட்டிக் கொள்ளலாம்.

ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 1.5  தள பரப்பளவு குறியீட்டை அதிகரிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தமிழக அரசு பரப்பளவு குறியீட்டை 2.0 ஆக உயர்த்தி  தற்போது அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

இந்த புதிய அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

FSI அதிகரிப்பால் கிடைக்கும் நன்மைகள்: 

 FSI இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதால் 1000 சதுரடி  மனைப்பரப்பில் 2000 சதுர அடி பரப்புக்கு வீடுகளை கட்டலாம். 

புதிய நிலத்தை வாங்காமலேயே பழைய மனையில் அதிக கட்டிடங்களை கட்ட முடியும் என்பதால் நிலத்திற்கு செலவிடப்படும் பெரும் தொகை குறையும்.

குறைந்த விலைக்கு வீடுகளை கட்டுமான நிறுவனத்தினர் விற்க முடியும். எனவே இதன் பலன் நேரடியாக மக்களை சென்றடையும் என நம்பப்படுகிறது.

இந்த அறிவிப்பு காரணமாக சென்னையில் இனி வழக்கத்தை விட உயரமான கட்டடங்களை கட்ட முடியும் இதன் காரணமாக  சென்னை நகரில், நெருக்கடி குறைய வாய்ப்பு உருவாகும்.