முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் திடீர் அனுமதி…

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திடீரென  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. இதனால், அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக நேற்று சுகாதாரத்துறை உள்பட  உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் எடப்பபாடி பழனிச்சாமி, பின்னர், இரவு நேர பொதுமுடக்கம் மற்றும் ஞாயிறு பொதுமுடக்கம் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தார்.

இந்த நிலையில்,  இன்று காலை  சென்னையில் உள்ள  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  ஆனால், குடல் இறக்க நோயால் அவதிப்பட்டு வரும் முதல்வர், அதற்கான அறுவை சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சேர்ந்துள்ளார் என கூறப்படுகிறது.

மேலும்,  முதல்வர் பழனிசாமிக்கு எடுக்கப்பட்ட சோதனையில், கொரோனா தொற்று ஏதும் இல்லை என்றும்   மருத்துவமனை  நிர்வாகம் தெரிவித்துள்ளது.