முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாயார் மறைவு- மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி திரு.கே.பழனிசாமி அவர்களின் தாயார் தவசாயி அம்மாள் அவர்கள் மறைவையொட்டி, கழகத் தலைவர் முக.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளார்.

அதில், முதலமைச்சர் திரு.பழனிசாமி அவர்களின் தாயார் திருமதி.தவசாயி அம்மாள் மறைவெய்திய செய்தியால் மனவேதனைக்கு உள்ளானேன். அவரைத் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தேன். அன்புமிக்க அன்னையை இழந்து வாடும் முதல்வரின்  குடும்பத்தினர்க்கு எனது ஆழ்ந்த அனுதாபமும் ஆறுதல்களும்!

‘தமிழக முதலமைச்சர் எடப்பாடி திரு. கே. பழனிசாமி அவர்களின் தாயார் தவசாயி அம்மாள் அவர்கள் மறைவையொட்டி, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி’
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி திரு. கே.பழனிசாமி அவர்களின் தாயார் தவசாயி அம்மாள் அவர்கள் தனது 93-ஆவது வயதில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த மனவேதனைக்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புமிக்க அன்னையை இழந்து வாடும் முதலமைச்சர் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.