3 மாவட்டங்களில் இன்று ஆய்வை தொடங்குகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சென்னை:  கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்து வரும் தமிழக முதல்வர், இன்று மேலும்,  3 மாவட்டங்களில் இன்று ஆய்வை தொடங்குகிறார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில்,  கொரோனா பாதிப்பை  தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே தமிழக முதலமைச்சர் பழனிசாமி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு  மாவட்ட ஆட்சியர்கள் ,அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார். மேலும் பல்வேறு அரசு திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.