6-ந்தேதி மதுரையில் ஆய்வு நடத்துகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை:
மிழகத்தில் கொரோனா நோய் தொற்று சென்னையை அடுத்து மதுரையில் அதிகரித்து வருவதால், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள்  குறித்து ஆய்வு நடத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 6ந்தேதி மதுரை செல்கிறார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம்  பேசிய அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் கூறிய தாவது,
கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்பட அவசியமில்லை. ஒருவேளை தொற்று ஏற்பட்டுவிட்டால் அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் போதும், விரைவில் குணமடைந்து விடலாம்.  மதுரை மாவட்டத்தை பொறுத்தவரையில் 21 கோவிட் கேர் சென்டர்கள் தயார் நிலையில் உள்ளன.

கார்ட்டூன் கேலரி