28ந்தேதி திருவாரூர் செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வரும் 28ந்தேதி திருவாரூர் மாவட்டம் பயண மாகிறார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் ஆகஸ்டு 31ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் பொதுமுடக்கம் மேலும் நீட்டிக்கப்படுமா  அல்லது தளர்த்தப்படுமா என்று பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்டம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஆய்வு செய்து வருகிறார்.

ஏற்கனவே,  திருவள்ளூர்,  வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் கோவை, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை, நெல்லை உள்பட  14 மாவட்டங்களில்  ஆய்வு மேற்கொண்ட நிலையில், மீண்டும் வரும் 28ந்தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு சென்ற ஆய்வு நடத்த உள்ளார்..

28 ஆம் தேதி அன்று திருவாரூர் மாவட்டம் செல்லும் முதல்வர், அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், இனிமேல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து  ஆய்வு செய்கிறார். மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட  திட்டங்களை திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி யிலும் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது.