டிசம்பர் 4-ம் தேதி சிவகங்கை பயணமாகிறார் முதலவர் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டிசம்பர் 4ந்தேதி சிவகங்கை மாவட்டத்தில்சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் டிசம்பர் 4-ம் தேதி சிவகங்கை மாவட்டம் செல்லும் முதலமைச்சர், ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தபடி, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைக்கிறார்.

பின்னர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் முதலமைச்சர் ஆய்வு நடத்துகிறார். அதைத் தொடர்ந்து தொழில் கூட்டமைப்பினர், விவசாய பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவினருடன் கலந்துரையாடுகிறார்.‘