அப்போலோ மருத்துவமனை: துரைமுருகன் டிஸ்சார்ஜ்; முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி!

சென்னை:

டல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் பழனிசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அதிமுகவினரிடையே பரபரப்பு நிலவி வருகிறது.

.தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து நேற்று நடைபெற இருந்த அலுவல் பணிகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில்,  நேற்று சென்னை யில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு  இருதய பரிசோதனை நடைபெறுவதாக கவடவ வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதே நேரத்தில், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இரவு அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட திமுக பொருளாளர் துரைமுருகன், வழக்கமான பரிசோதனை முடிந்து வீடு திரும்பினார்.

தமிழக அரசியல் தலைவர்கள் மாற்றி மாற்றி அப்போலோ சென்று படுத்துக்கொள்வது வழக்கமாகி வருகிறது…

கார்ட்டூன் கேலரி