சென்னை: ஜனவரி 23ந்தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அண்ணா தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்டங்கள் தோறும் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில்,  கோவை மாவட்டத்தில் 23 ந்தேதி தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து  அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 23 ந்தேதி காலை 7.05 மணி அளவில் கோவை மாவட்டம் அருள்மிகு கோனியம்மன் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்து தேர்தல் பிரச்சாரத்தை துவக்குகிறார்.

அவிநாசி ரோடு மேம்பாலம், மரக்கடை, என்.எச். ரோடு, செட்டி வீதி, பெத்தேகவுண்டர் சாலை வழியாக முதல்வர் செல்கிறார்.

8.10 மணிக்கு வேணுகோபால்சாமி ரோடு வழியாக பிரச்சாரம் மேற்கொண்டு ராஜ வீதி என்னும் இடத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

8.40 மணிக்கு கருப்பகவுண்டர் வீதி, செட்டி வீதி வழியாக சென்று செல்வபுரத்தில் பேசுகிறார்.

10 மணிக்கு பேரூர், சுண்டக்காமுத்தூர், குளத்துப்பாளையம், கோவைபுதூர் பிரிவு வழியாக சென்று குனியமுத்தூரில் பேசுகிறார்.

10.35 மணிக்கு கரும்புகடை, ஆத்துப்பாலம், குறிச்சி பிரிவு, போத்தனூர் ரோடு வழியாக முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொண்டு சங்கமம் திருமண மண்டபத்தில் இஸ்லாமிய பெரியோர்களுடன் கலந்துரையாடுகிறார்.

11.25 மணிக்கு போத்தனூர் ரோடு, கடை வீதி, சாரதா மில் ரோடு வழியாக சென்று சுந்தராபுரத்தில் பேசுகிறார்.

12 மணி அளவில் மதுக்கரை ரோடு, ஹவுசிங் யூனிட் பேஸ்- வழியாக சென்று மதுக்கரை மார்க்கெட்டில் பேசுகிறார்.

12.50 மணிக்கு எல்.என்.டி. பைபாஸ் ரோடு, மலுமிச்சம்பட்டி, ஒத்தக்கால்மண்டபம், பிரிமியர் மில் வழியாக சென்று கிணத்துக்கடவு என்ற இடத்தில் பேசுகிறார்.

1.40 மணிக்கு தாமரைக்குளம், கோவில்பாளையம், ஆச்சிப்பட்டி, வடக்கிபாளையம் பிரிவு வழியாக சென்று முருகன் மஹாலில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மற்றும் பிற சமூகத்தினருடன் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். அங்கு முதலமைச்சர் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் அண்ணா தி.மு.க.வில் இணைகிறார்கள்.

மாலை 3.35 மணிக்கு பொள்ளாச்சி காந்தி சிலைநகராட்சி அலுவலகம், மார்க்கெட் ரோடு வழியாக சென்று திருவள்ளுவர் திடலில் பேசுகிறார். 4.05 மணிக்கு ஜமீன் ஊத்துக்குளியில் பேசுகிறார். 4.45 மணிக்கு அம்பராம்பாளையம், கைகாட்டி வழியாக சென்று ஆனைமலை (ரவுண்டானா)பேசுகிறார்.

5.45 மணிக்கு மாசாணியம்மன் கோயில், என்.எம். சுங்கம் (வால்பாறை ரோடு) வழியாக சென்று அங்கு முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இரவு 7.15 மணிக்கு பொள்ளாச்சி ரோடு, மரப்பேட்டை, பல்லடம் ரோடு, சுல்தான்பேட்டை ரோடு, நெகமம் வழியாக சென்று சுல்தான்பேட்டையில் பேசுகிறார்.

இரவு 8.25 மணிக்கு சந்திராபுரம், செலக்கரிச்சல், அப்பநாயக்கன்பட்டி, கலங்கல் வழியாக சென்று சூலூர் நால்ரோடு என்னும் இடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

இதனையடுத்து பாப்பம்பட்டி பிரிவு, சிந்தாமணிபுதூர், எல்.அன்ட்.டி. பைபாஸ், அவிநாசி ரோடு, லட்சுமி மில் வழியாக செல்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.