கள்ளக்குறிச்சி: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆய்வு செய்த நிலையில், அங்கு  ரூ. 20.86 கோடி மதிப்பிலான 60 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு நடத்தி வருகிறார். அத்துடன் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.

இந்த நிலையில், இன்று கள்ளக்குறிச்சி சென்ற முதல்வர், அங்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து பல்வேறு அரசு துறைகளின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ. 15.16 கோடி மதிப்பிலான 14 முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

அது மட்டுமின்றி ரூ. 20.86 கோடி மதிப்பீட்டிலான 60 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பல்வேறு

அரசு துறைகளின் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இதுகுறித்து முதல்வர் பழனிச்சாமியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், இன்று (10.08.2020) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, குடும்ப அட்டைதாரர்களுக்கு “விலையில்லா மறுபயன்பாட்டு முகக்கவசங்களை” வழங்கினேன்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில், ரூ.15.16 கோடி மதிப்பிலான 14 முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்து, ரூ.20.86 கோடி மதிப்பிலான 60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன் என்று தெரிவித்துள்ளார்.