விவசாயிகளின் முதுகில் குத்திவிட்டார் முதல்வர் எடப்பாடி! முத்தரசன்

நாகை:  மத்தியஅரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு அதிமுக அதரவு அளித் துள்ளதன் மூலம், விவசாயகளின் முதுக்கில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குத்திவிட்டார் என்று   இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

நாகையில் செய்தியாளர்களை சந்தித்த  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயளாலர் முத்தரசன், “மத்திய அரசு நிறைவேற்றி உள்ள விவசாய சட்டங்கள், இந்தியாவில் உள்ள 70 சதவீத விவசாயி களுக்கு எதிரானது.  தனியார் மற்றும் கார்பரேட் முதலாளிகளை லாபம் அடைய செய்ய இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மூன்று சட்டங்கள் குறித்து பிரதமர் மோடி பொய் கூறி வருகிறார். மத்திய அரசு தீங்கான சட்டங்கள் கொண்டு வந்தாலும் அனைத்தையும் கண்மூடி தனமாக ஆதரிப்பது தமிழக முதல்வரின் வேலையாக உள்ளது.

இந்தியாவிலேயே மத்திய அரசின் விவசாயிகளுக்கு எதிரான இந்த சட்டங்களை ஆதரிக்கும் ஒரே விவசாயி நமது முதல்வர் எடப்பாடி மட்டுமே.

வேளாண் சட்டத்தால் வியாபாரிகளுக்கு குறைந்தபட்சம் ஆதரவிலை கிடைக்காது, விவசாயிகள் அறுவடை முடிந்தவுடன் விற்று பணமாக்கவே விவசாயிகள் பார்ப்பார்கள் பெரும் வியாபாரிகள் மட்டுமே இருப்பு வைத்து கள்ள மார்கெட்டில் விற்பனை செய்யமுடியும்.

தமிழக முதல்வர் உண்மையான விவசாயியாக இருந்தால், அதிமுக 9 நாடாளுமன்ற உறுப்பினர் களும் இந்த மசோதாவிற்கு எதிராக வாக்களித்திருக்க வேண்டும், எதிராக வாக்களித்ததால் விவசாயிகளின் முதுகில் குத்திய துரோகிகளாக மாறினர்” என்றார்.

மேலும் திமுக கூட்டணியில் இந்தியகம்யூனிஸ்டு கட்சி தொடர்கிறது என்றும் தெரிவித்தார்.