சென்னை: மாவட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்பு செய்வதற்காக மாவட்டங்களுக்கு நேரடியாக செய்து ஆய்வு வரும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 13-ம் தேதி முதல் விருதுநகர், குமரி, தூத்துக்குடி  ஆகிய  மாவட்டங்களில்  சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் வளர்ச்சி பணிகள், புதிய திட்டங்கள் தொடங்கி வைப்பு, பயனர்களுக்கு  உதவிகள் வழங்குவது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சமி, மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே  25க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு பணிகள் நடத்தி முடித்துள்ளளார்.

இந்த நிலையில்,  தற்போது  மேலும் 3 மாவட்டங்களுக்கு ஆய்வுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி வரும் 13ம் தேதி முதலாவதாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு செல்ல உள்ளளார். தொடர்ந்து,  14ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டத்திற்கு செல்ல உள்ளார்.

இந்த சுற்றுப்பயணத்தின்போது, மாவட்ட ஆட்சியர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், விவசாய அமைப்பினர், தொழில் துறையினரோடு முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.