மத்தியசென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரசாரம் திடீர் ரத்து!

சென்னை:

ன்று மத்திய சென்னை தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்ய இருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தேர்தல் பிரசாரம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று வடசென்னை பகுதியில் தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். அப்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை மத்திய சென்னை தொகுதியில் அதிமுக கூட்டணியை சேர்ந்தர பாமக தனது வேட்பாளரை நிறுத்தி உள்ளது பாமக வேட்பாளர் சாம் பாலை ஆதரித்து,   சென்னை திருவல்லிக் கேணியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கவிருந்த முதல்வர் பழனிசாமியின் தேர்தல் பிரச்சாரம் திடீர் ரத்து

முதல்வரின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இன்று காலை மேற்கொள்ளவிருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக  கூறப்பட்டு உள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: admk, central chennai, Chief Minister EPS, election campaign, pmk, Sampaul pmk
-=-