சென்னை:
ச்சத்தீவை மீட்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என்று தான் நம்புவதாக தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலுள்ள வாலாசா பெரிய பள்ளிவாசலில் உள்ள காயிதே மில்லத்தின் நினைவிடத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க பொருளாளருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.
a
இதன் பிறகு  மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,  ”தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர் காயிதே மில்லத். அதேபோல், சிறுபான்மையினர் நலன் மற்றும் தமிழர்களின் நலனை காக்க தி.மு.க தொடர்ந்து குரல் கொடுக்கும். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழக மக்களின் நலனுக்காக தி.மு.க. போராடும்.
அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவை மீட்போம் என கூறப்பட்டிருந்தது. அதன்படி கச்சத்தீவை மீட்க தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.