கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து, விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வேளாண் பெருமக்களின் கோரிக்கையை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து முதல்போக பாசனத்திற்காக 12.8.2020 முதல் 9.12.2020 வரை தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன் என்று முதல்வர் அறிவித்து உள்ளார்.

இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டத்தில் உள்ள 8ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன  வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். விவசாய பெருமக்கள் நீரை சிக்கமான பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு, உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு  கூறி உள்ளார்.