சேலம்:

காவிரி விவகாரத்தில் வரும் 16ந்தேதி நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

காவிரி தொடர்பான வழக்கில், மத்திய அரசு இன்று வரைவு திட்டத்தை தாககல் செய்தது. இதுகுறித்த பதிலை வரும் 16ந்தேதி தெரிவிக்குமாறு 4 மாநில அரசுகளுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

இந்நிலையில், இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி விவகாரத்தில் வரும் 16ஆம் தேதி தமிழகத்துக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புவதாக கூறினார்.

மத்திய அரசின் வரைவு திட்டம் தமிழகத்திற்கு துரோகம் இழைப்பதாக தமிழக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்றும், துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழகத்திற்கு மிகப்பெரிய வெற்றி என்று கூறியிருப்பதும் விவசாயிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.