சென்னை:

காவிரி விவகாரம்: முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

காவிரி பிரச்சினையில்,  உச்சநீதி மன்ற உத்தரவுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விதிக்கப்பட்டிருந்த கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் துணைமுதல் ஓ.பன்னீர் செல்வம் உள்பட அமைச்சர்கள், தமிழக தலைமை செயலாளர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்பட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.

காவிரி நதி நீர் தொடர்பான மேல்முறையீடு வழக்கில், 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அந்த 6 வார காலக்கெடு இன்றுடன் முடிவடைவது குறிப்பிடத்தக்கது..