பெங்களூரு:

ர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ஆன்மிக பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடக காங்கிரஸ் முதல்வரும் சித்தராமையா, தனது சொந்த ஊரான சித்தரமனாகுண்டி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் மும்முனை போட்டி நிலவி வரும் நிலையில் முதல்வர்  சித்தராமையா சாமுண்டீஸ்வரி, பாதாமி ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்.

பா.ஜனதா முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா ஷிகாரிபுரா தொகுதியிலும் ஜனதாதளம் (எஸ்) முதல்வர் வேட்பாளர் குமாரசாமி சென்னபட்னா, ராம்நகர் ஆகிய இரு தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பா.ஜனதா முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா தனது தொகுதியான சிமோகா மாவட்டம் ஷிகாரி புரா தொகுதியில் காலை 7 மணிக்கு சென்று முதலாவதாக ஓட்டுப்போட்டார்.

மத்திய மந்திரி சதானந்த கவுடா புத்தூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். முன்னாள் பிரதமர் தேவே கவுடா ஹசன் நகரில் வாக்களித்தார்.

இந்நிலையில், முதல்வர் சித்தராமையா தனது சொந்த ஊரான சித்தரமனாகுண்டி கிராமத்தில் வாக்களித்தார்.