மும்பை:

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் முடக்கப்படுவதாக உத்தவ் தாக்கரே தலைமையிலான மாநில அரசு அறிவித்து உள்ளது.

அத்தியாவசிய தேவைகள் தவிர அனைத்து சேவைகளும், மாவட்ட எல்லைகளும் மூடப்படுவதாகவும், மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை 7 பேரை பலிகொண்டுள்ள நிலையில், 415 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிகபட்ச கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி உள்ளது.

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படுவதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

அனைத்து மாவட்ட எல்லைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன, மாவட்டங்களுக்கு இடையிலான வாகன நடமாட்டம் தடைசெய்யப்படும் என்றும்,  அத்தியாவசியப் பொருட்களான உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பயணிக்க அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளத.

மகாராஷ்டிரா அரசு மாநிலம் தழுவிய ஊரடங்கு உத்தரவை அறிவித்ததால் அனைத்து மாவட்ட எல்லைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன.  சில கட்டுப்பாடுகளுடன். அத்தியாவசிய சேவைகளும் அவற்றின் போக்குவரத்தும் அனுமதிக்கப்படுகின்றன,

. “இந்த தொற்று பரவலின் தீர்க்கமான திருப்புமுனையில் நாங்கள் இருக்கிறோம். எதிர்வரும் நாட்கள் மிக முக்கியமானவை” எனவே மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.