கருணாநிதியை நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு முதல்வர் வந்தார்.

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியை நலம் விசாரிக்க முதல்வர் எடப்பாடிபழனிசாமி வந்திருக்கிறார்.

 

 

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலிவு காரணமாக, சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை குடியரசு துணைத்தலைவர் வெங்கையாநாயுடு உட்பட பலபிரமுகர்கள் சந்தித்து நலம் விசாரித்துச் சென்றனர்.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள் காவேரி மருத்துவ மனைக்கு வந்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்து அறிந்தனர்.

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, “கருணாநிதி நலமுடன் உள்ளார்” என்று தெரிவித்தார்.