பெண்கள் பாதுகாப்புக்காக ‘திஷா’ செயலி: ஜெகன்மோகன் ரெட்டி அறிமுகம்

அமராவதி:

ந்திர மாநிலத்தில்  பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக ‘திசா’ சட்டம் கொண்டு வந்துள்ள ஜெகன் மோகன் ரெட்டி அரசு, தற்போது திசா செயலியை அறிமுகப்படுத்தி உள்ளார்.

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஆந்திராவில் ஆட்சி செய்து வரும் ஜெகன் அரசு,  பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற் காக திசா என்ற புதிய சட்டத்தை கடந்தஆண்டு (2019) டிசம்பர் மாதம் நிறைவேற்றியது. அதன்படி, க மாநிலம் முழுவதும் 13 மாவட்டங்களின் திசா பெயரில் தனி போலீஸ் ஸ்டேஷன், தனி நீதிமன்ற அமைப்பு துவங்கப்படும் என அறிவித்தார்.

இந்த சட்டம் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை எற்படுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கிருத்திகா சுக்லா, ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டு உள்ளார். அதன் தொடர்ச்சியாக  திசா போலீஸ் ஸ்டேஷனை யும், திசா செயலியையும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, பெண்கள் மற்றும் சிறுமிகளின் மீதான கொடுமை களை எதிர்த்து போராடவும் அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கவும், திசா போன்ற சட்டங்களை அமல்படுத்த வேண்டியுள்ளது என்றார்.