அக்.17ந்தேதி அதிமுக 47வது ஆண்டு விழா: உளுந்தூர்பேட்டை கூட்டத்தில் முதல்வர் பங்கேற்பு

சென்னை:

திமுக கட்சி தொடங்கிய 47வது ஆண்டு விழா வரும் 17ந்தேதி தமிழகம் முழுவதும்  கொண்டாடப் படுகிறது.  உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் கூட்டத்தில் முதல்வர் பழனிச்சாமி பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார்.

தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக களமிறங்கிய எம்ஜிஆர் அதிமுக என்ற புதிய கட்சியை தொடங்கி னார். இந்த கட்சி தொடங்கி  46 ஆண்டுகள் முடிவடைந்து 47வது ஆண்டு வரும் 17ந்தேதி தொடங்குகிறது.

இதையொட்டி,  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடக்க நாள் விழா கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம், அதிமு கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான கே.பழனிசாமி ஆகியோர் கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், அதிமுக கொடியை ஏற்றி வைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து உளுந்தூர்பேட்டையில் நடைபெற உள்ள அதிமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் செய்து வருகின்றனர்.