Random image

முதல்வரின் செயலாளர் பணியிட மாற்றம்

 

தமிழக முதலமைச்சரின் இரண்டாம் நிலை முதன்மைச் செயலாளர் சிவதாஸ் மீனா  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக முதலல்வர் எடப்பாடி பழனிச்சாமியின்  இரண்டாம் நிலை முதன்மைச் செயலாளராக பொறுப்பு வகிப்பவர்  சிவதாஸ் மீனா. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல்வரின்  முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஒரு வருடம் மட்டுமே பதவிக்காலம் முடிந்துள்ள நிலையில், இவரைப் பணியிட மாற்றம் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இவர் மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.