ஸ்லாமாபாத்

டை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான ஹர்கத் உல் முஜாகிதீன் அமைப்பு தலைவர் மவுலானா ஃபஸ்லுர் ரகுமான் கலில் என்பவர் இம்ரான் கான் கட்சியில் இணைந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக உலக நாடுகளின் அழுத்தத்தினால் பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. தீவிரவாத இயக்கங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தடை செய்யப்பட்டு வருகிறது. பாக் அரசால் சமீபத்தில் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 44 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஜெய்ஷ் ஈ முகமது தலைவர் மசூத் அசாரின் சகோதரரும் ஒருவர் ஆவார்.

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ள தீவிரவாத இயக்கங்களில் ஹர்கத் உல் முஜாகிதீன் என்னும் அமைப்பும் ஒன்றாகும். மவுலானா ஃபஸ்லுர் ரகுமான் கலில் இந்த அமைப்பின் தலைவரும் இதை உருவாக்கியரும் ஆவார். இவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கட்சியான தெகரீக் ஈ இன்சாஃப் கட்சியில் இணைந்துள்ளார்.

இந்த செய்தியை ஊடகங்கள் உறுதிப்படுத்தி உள்ளன. இது குறித்து மவுலானா ஃபஸ்லூர் ரகுமான் கலில், ”பாகிஸ்தான் அரசு நாட்டை முழுமையான இஸ்லாமிய குடியரசாக மாற்ற முயன்று வருகிறது. அதற்கு எனது பங்கை அளிக்கவே நான் இந்த கட்சியில் இணைந்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.