15 மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று மாலை தலைமைச் செயலாளர் ஆலோசனை!

சென்னை:

கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள 15 மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சித்தலைவர்களுடன் தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில்  கொரோனா பாதிப்பு  தீவிரமடைந்து உள்ளது. சென்னை மட்டுமின்றி பல்வேற மாவட்டங்களிலும் தொற்று அதிகரித்துள்ளது. தமிழகத்தல் கொரோனா பாதிக்கப்பட்டோர்  மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல பலி எண்ணிக்கை 1510 ஆக உயர்ந்துள்ளது

இந்த நிலையில்,  கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை,மதுரை உள்ளிட்ட 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்த இருக்கிறார்.

அதன்படி,  சென்னை, மதுரை உள்பட  15 மாவட்ட ஆட்சியர்களுடன், கொரோது பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக   இன்று மாலை  ஆலோசனை நடத்தவுள்ளார்.

கார்ட்டூன் கேலரி