ஆளுநர் அழைப்பை புறக்கணித்த முதல்வர்

 

பாண்டிச்சேரி

ஆளுநர் மாளிகையில் விருந்துக்கு அழைப்பு விடுத்த, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் அழைப்பை முதலமைச்சர் நாராயணசாமி புறக்கணித்தார்.

 

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயண சாமிக்கும் பனிப்போர் நடந்துவருகிறது.

அரசின் செயல்பாடுகளில் அத்து மீறி மூக்கை நுழைப்பதாக ஆளுநர் மீது முதல்வர் குற்றம் சாட்டி வருகிறார். அதற்கேற்றாற்போல தன்னிச்சையாக பல உத்தரவுகளை ஆளுநர் கிரண்பேடி பிறப்பித்து வருகிறார். சமீபத்தில் தனது விருப்பத்துக்கு மூன்று நியமன எம்.எல்.ஏக்களை நியமித்தார். இது பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது.

இந்த நிலையில் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவுபெற்றதையடுத்து, ஆளுநர் மாளிகையில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு வருமாரு முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் கிரண்பேடி அழைப்பு விடுத்தார். ஆனால் இந்த அழைப்பை முதல்வர் நாராயணசாமி புறக்கணித்துவிட்டார்.

முதல்வரோடு, அமைச்சர்கள் மற்றும் காங்., திமுக, அதிமுக எம்.எல்.ஏக்களும் புறக்கணித்தனர்.

அரசியல் வட்டாரத்தில் இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.