கொரோனாவின் கொடூரம் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் புலயம்பெயர் தொழிலாளர் கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியான நிலையில், ஏராளமானோர், பல நூறு கிலோ மீட்டர் தூரத்தை கடக்க நடந்தே செல்கின்றனர்…

இந்த நிலையில், நடக்க முடியாத சிறுவன், சூட்கேஸ் பெட்டியின் மீது நின்றவாரே தூங்குகிறார், அவனையும் பெட்டியோடு சேர்த்து அவனது தாயார் சாலையில் இழுத்துச்செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது…
புலம்பெயர் தொழிலாளர்களின் துயரம் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. இந்த சம்பவத்தை கண்ட செய்தியாளர், அவர்களிடம்,  மாநில அரசு ஏற்பாடு செய்யும் பேருந்துகளில் செல்ல வில்லையா என கேள்வி எழுப்புகிறார். அதற்கு அவர் எந்த பதிலும் தெரிவிக்காமல், தனது முகத்தை மூடிக்கொண்டு குழுவினருடன் தொடர்ந்து, வேகமாக நடந்து செல்கிறார்.
விசாரணையில், அந்த குழுவினர் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சுமார்   800கி.மீ தொலைவில் உள்ள ஜான்சி நோக்கி அவர்கள் சென்றுகொண்டிருப்பதாகவும், மேற்கு உ.பி.யின் ஆக்ராவில் படம்பிடித்துள்ளனர் என்று  கூறப்படுகிறது.