பீஜிங்:

குடும்ப கட்டுப்பாட்டை தளர்த்தியும் சீனாவில் குழந்தை பிறப்பு வகிதம் குறைந்து வருகிறது.

 

சீனாவில் பிறப்பு விகிதம் கடந்த ஆண்டு 1.72 கோடியாக இருந்ததுது. இது 2016-ம் ஆண்டை விட 18 லட்சம் குறைவு. 2016ம் ஆண்டி-ல் சீனாவில் பிறப்பு விகிதம் 1.90 கோடியாகும். மக்கள் தொகை குறைந்திருப்பதற்கு வளமான வயதுடைய பெண்களின் எண்ணிக்கை குறைந்தது தான் காரணம். வளரும் பெண்களும் திருமணம், கர்ப்பம் போன்றவற்றை தாமதம் செய்கின்றனர். சீனாவில் 58.2 சதவீத மக்கள் நகர்புறத்தில் வசிக்கின்றனர்.

சீனாவில் ஜனத்தொகையை கட்டுப்படுத்த 1970ம் ஆண்டு-களில் ஒரு குடும்பம், ஒரு குழந்தை சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் 42 ஆண்டுகளில் 40 கோடி பிறப்புகள் தடுக்கப்பட்டது. உலக மக்கள் தொகையில் சீனா 18.67 சதவீத மக்களை கொண்டுள்ளது.

சீனாவில் கடந்த 30 ஆண்டுகளில் 3 சதவீத மக்கள் தொகை குறைந்துள்ளது. குடும்பத்திற்கு 2 குழ ந்தைகளை சீன அரசு அனுமதித்தும் அந்நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. ஒரு குழந்தை திட்டத்தால் சீனாவில் முதியோர் எண்ணிக்கை உயர்ந்திருப்பது அந்நாட்டுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

2035ம் ஆண்டில் முதியோரின் எண்ணிக்கை 40 கோடியை அடையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது 24 கோடி முதியவர்கள் உள்ளனர். சீனாவில் உயிர் வாழும் சராசரி வயது 2010ம் ஆண்டில் 74.83 ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு 76.5 ஆக உயர்ந்துள்ளது.

2012ம் ஆண்டு முதல் தொழிலாளர் பற்றாக்குறை உயர்ந்துள்ளது. 2015ம் ஆண்டு சீனாவில் குடும்பத்திற்கு 2 குழந்தைகள் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.