வாழ்நாள் முழுவதும் இலவச பயணச் சலுகை பெற்ற குழந்தை

டில்லி

டந்த புதன்கிழமை இண்டிகோ நிறுவனத்தின் பறக்கும் விமானத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயண சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை அன்று மாலை இண்டிகோ நிறுவனத்தின் விமானம் 6இ 122 சேவை டில்லியில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்தது.  அந்த விமானம் பறந்து கொண்டு இருந்த போதே ஒரு பெண் பயணி ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.  இந்த தகவல் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகின.

இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த புதன்கிழமை டில்லியில் இருந்து பெங்களுக்கு சென்ற எங்கள் விமானத்தில் வழியில் ஒர் ஆண் குழந்தை பிறந்துள்ள விவரம் எங்களுக்குக் கிடைத்துள்ளது.  அந்த விமானம் 7.40க்கு தரையிறங்கியது.  அந்தக் குழந்தையும் தாயும் நலம்  அப்பெண்ணுக்கு முதலுதவி அளித்த விமான ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த குழந்தை இண்டிகோ விமானத்தில் பிறந்ததையொட்டி அந்த குழந்தைக்கு இண்டிகோ நிறுவன விமானத்தில் வாழ்நாள் முழுவதும் இலவச பயண சலுகை வழங்கப்பட்டுள்ளது.  இந்த தகவலை இண்டிகோ விமான நிறுவன வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.