கோவையில் சோகம்: தாய் ஊட்டிய போது கோழிக்கறி தொண்டையில் சிக்கி சிறுவன் பலி

கோவை: கோவை அருகே தாய் ஊட்டியபோது கோழிக்கறி தொண்டையில் சிக்கி சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் காமாட்சி.  5 ஆண்டுகளுக்கு முன்பு கோவை தொண்டாமுத்தூர் பகுதிக்கு வந்து கூலி வேலை செய்தார். அப்போது அசாமை சேர்ந்த பிங்கி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் 4 வயதில் கபிலேஷ் என்ற மகன் உள்ளார்.

காமாட்சிக்கும், பிங்கிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட, பிங்கி தனது கணவரை பிரிந்து வடவள்ளியை சேர்ந்த லிங்கேஷ் என்பவருடன் தனது மகனுடன் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று, லிங்கேஷ் கறிக்கோழி வாங்கி வர அதை குடும்பத்தினர் சமைத்து சாப்பிட்டனர். அப்போது பிங்கி, மகன் கபிலேசுக்கு கோழிக்கறியை ஊட்டி விட்டு தானும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். அப்போது கோழிக்கறி துண்டு ஒன்று சிறுவனின் தொண்டையில் சிக்கியது.

மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறுவன் மயங்கி கீழே விழுந்தான்.  உடனே குடும்பத்தினர் அனைவரும் கபிலேஷை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார்.

தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறுவன் கபிலேஷ் உயிரிழந்தார்.  இறந்தான். இந்த சம்பவம் குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி