பெங்களூருவில் குழந்தைகள் நட்புறவுடன் பழகுவதற்கு பிரத்யேக நீதிமன்றம்

பெங்களூரு:

குழந்தைகள் நட்புறவுடன் பழகும் வகையில் ஒரு நீதிமன்றத்தை பெங்களூருவில் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற நடவடிக்கைகளை புரிந்து கொள்ளும் வகையில் சிறுவர்கள் நட்புடன் பழக கூடிய வகையிலான நீதிமன்றங்களை ஏற்படுத்துவதன் மூலம், நீதித்துறையின் செயல்பாடு குறித்த அறிமுகம் அவர்களுக்கு கிடைக்கும். அதனால் குழந்தைகள் நட்புறவுடன் கூடிய நீதிமன்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கர்நாடக சட்டப் பணிகள் ஆணையம் மற்றும் சிறுவர் நீதிமன்ற குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடந்தது. இதில் கலந்து கொண்ட கர்நாடக சட்டப் பணிகள் ஆணைய உறுப்பினர் உமா இதை வலியுறுத்தி பேசினார்.

குற்றவியல் வழக்குகளில் விரைந்து தீர்ப்பு வழங்குவதில் குற்றவியல் நீதித்துறையின் நடைமுறை பலவீனமாக உள்ளது. இதை சீர்செய்ய இந்த துறையில் முக்கிய காரணிகளாக விளங்கும் போலீஸ், வக்கீல், ஆலோசகர்களின் திறனை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

‘‘நீதிபதிகளும் இந்த சமுதாயத்தில் ஒரு அங்கம் என்ப¬ நாம் உணரவேண்டும். அவர்கள் முதலில் வக்கீல் என்பதை உணர வேண்டும். இந்த சமுதாயத்தின் மனநிலை மாற வேணடும். நீதிமன்றங்கள் சமநிலையை கொள்ள வேண்டும். நீதிபதிகள் பெரும்பாலும் ஆதாரங்களை வைத்தே செயல்பட கூடியவர்கள்’’ என்று டெல்லி சட்டப் பணிகள் ஆணையத்தை சேர்ந்த கீதாஞ்சலி கோயல் பேசினார்.

மேலும் கூட்டத்தில் சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் திட்டம் மற்றும் பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரது குடும்பத்தார் குறித்து விவாதிக்கப்பட்டது.