தெலுங்கானாவில் அதிர்ச்சி: அப்பாவி தொழிலாளியை குழந்தை கடத்துபவர் என வாட்ஸ்அப்பில் வதந்தி

தெலுங்கானாவில் கிராமப்பகுதியை சேர்ந்த ஆடுமேய்க்கும் ஏழை அப்பாவி தொழிலாளி ஒருவரை  குழந்தை கடத்துபவர் என வாட்ஸ்அப்பில் வதந்தி பரவியது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அந்த அப்பாவி நபர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானாவின் வனார்பதி மாவட்டத்தில் உள்ள கில்லா கன்பூர் மண்டல மானஜிப்பேத் கிராமத்தை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி ஜெட்டி யாதீயா. இவரது புகைப்படம் வாட்ஸ்அப்பில் குழந்தை கடத்துபவர் என குறிப்பிட்டு தகவல் பரவியது. இவரை கண்டால் உடனே கொலை செய்யும்படியும், இந்த தகவலை மேலும் 10 பேருக்கு அனுப்பும்படியும் தந்த வதந்தியில் பேசியிருந்தவர் கூறியிருந்தார்.

இந்த தகவல் அவரது மொபைல் வாட்ஸ்அப்பிலும் வந்தது. அவரது ஊரிலும் இந்த தகவல்  பரவியது. அதில் பேசிய நபர்கள் இருவரும் யாதையாவின  நண்பர்கள் ஸ்ரீனிவாஸ் மற்றும் சோந்தம் ராஜா ஆகியோர் என்று தெரிய வந்தது. அவர்கள் விளையாட்டுத்தனமாக இதை அனுப்பியிருந்தால், அதுகுறித்து தான் அதிகம் அக்கறை காட்ட வில்லை என்ற யாதையா இதுகுறித்து பலரிம் தன்னிடம் விசாரித்ததாகவும், அவர்களுக்கு மறுப்பு தெரிவித்து வந்தாகவும் கூறி உள்ளார்.

ஆனால், இதுபோன்ற வதந்திகள் காரணமாக சமீபத்தில் பல சம்பவங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வந்த நிலையில், பலர் இந்த தகவல் குறித்து அவரிடம்  விசாரித்த நிலையில் இதுகுறித்து உடனே காவல்துறையில் புகார் கூறியதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கூறிய வனார்பதி எஸ்ஐ விஜயக்குமார், யாதையா  என்ற ஆடுமேய்க்கும்  தொழிலாளி, இந்த வதந்தி குறித்த   செய்தியை எங்களுக்கு காண்பித்தார், சமூக ஊடகத்தில் பரவி வரும்  செய்த போலி வதந்தியால் தான்  தாக்கப்படலாம் எனவும்  தெரிவித்தார்.

இதுதொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த இரண்டு பேரை அழைத்து விசாரணை நடத்தினோம். அவர்கள்  இதை முதலில் விளையாட்டுத்தனமாக 5 பேருக்கு அனுப்பியதாகவும் பின்னர் அதை நீக்கி விட்டதாகவும் கூறினர். ஆனால், இந்த வதந்தி வாட்ஸ்அப்பில் வைலாகி உள்ளது.

தற்போது அந்த வதந்தியை நீக்கப்பட்டு  விட்டதாகவும், பொதுமக்கள் இதுபோன்ற போலி வதந்திகளை நம்பவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

இது தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.